எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
எத்தனை நூலகங்களில் தேடியும் பேச்சுப்போட்டிக்கும், எழுத்துப்போட்டிக்கும் தேவையான உள்ளடக்கம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மேஜையின் மீது தலை சாய்த்து அழுதுகொண்டிருந்தாள் செல்லம்மா. தனியே அழுதுகொண்டிருந்தவளை பார்த்து தலையை வருடிக்கொடுத்துக்கொண்டே கேட்டார் தாத்தா “என்னடா கண்ணு”. வீட்டிற்கு வெறும் சுமையாக பழைய பொருட்களோடு பொருட்களாக இருந்த தாத்தாவிடம் சொல்லி அழுதாள்வேறு வழியின்றி. தன் அறைக்கு சென்று திரும்பி ஒரு பேனாவை கையில் கொடுத்துவிட்டு அரைமணிநேரம் பேசினார். அது காந்தி வெளியிட்ட சுதேசி பேனா. நூலகத்தில் கிடைக்காத அவளின் தேடல் கிடைத்துவிட்டது. பரிசும் கிடைத்தது. அவளின் கட்டுரையின் தலைப்பு “சுதேசி என்கிற தற்சார்பு பொருளாதாரம்”. பேசிய தலைப்பு “வீட்டில் இருக்கும் நூலகங்கள்”
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

 
