எழுத்தாளர்: நா மதுசூதனன்
திரைப்படங்களோ குறும்படங்களோ இப்பொழுது கேள்வி கேட்காமல் ஹிட்
அடிக்குமென்றால் அது செக்ஸும் பேயும் தான் என்று மாதவனுக்குத் தெரியும்.
தன்னுடைய முதல் வீடியோ ஒரு ஹாரர் காமெடியாக இருக்க வேண்டும் என்று
முடிவெடுத்து தான் பெரிய பங்காளவில் உள்ள அந்த ஒரு ரீடிங் ரூமை லொகேஷனாக முடிவு செய்தான்.
ஒரே கோணத்தில் டிரோன் காமிராவை அமைத்து அது ஓடிக்கொண்டே
இருக்க கதவுக்கு அப்பாலிருந்து இவன் இயக்கிக் கவனிக்க முடிவு
செய்தான்.
ரத்தக்கறையுடன் ஒரு ஆள் மேலிருந்து இறங்கி காமிராவிற்கு மிகக் க்ளோசப்பில் கையிலிருந்த ரத்தத்தை உதர வேண்டும். கீழிலிருந்து ஏறும் கோணம் நெஞ்சில் முடிந்துவிட வேண்டும்.
பின்னர் புத்தகங்கள் நிறைந்த அந்தப் படிக்கும் அறையில் உள்ள அந்த டம்மி கண்ணாடியில் ‘மாட்டிக் கொண்டாயா மாதவா’ என்று ரத்தத்தால் எழுத வேண்டும்.
அந்த உருவத்தின் பிரதிபலிப்பு இருக்கக் கூடாது என்பது காட்சி.
மானிட்டரில் மாதவன் கவனித்துக் கொண்டு இருக்கையில் அந்த உருவம் இறங்கி வந்து ரத்தத்தை உதறி திரும்ப நடந்தது.
உடல் ஒரு புறம் திரும்பியிருக்க முகம் மட்டுமே கண்ணாடியில் தெரிய, தனது நாக்கால் ‘மாட்டிக்கொண்டு விட்டாயே மாதவா’ என்று எழுதியது.
கதவுக்கு அந்தப்புறம் இருந்து உறைந்து போய் மாதவன் பார்த்துக் கொண்டிருக்க அந்தக் கண்ணாடியில் தெரிந்ததும் மாதவனின் முகம் தான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/