எழுத்தாளர்: விஜயலட்சுமி தங்கமுத்து
தனிமையில் இருந்த நாற்காலி அதன் நான்கு பக்கம் கொண்ட நண்பர்களிடம் தனது வாழ்நாள் சுக-துக்கத்தின் சுமைகளை இறக்கி வைத்தது. இரவு நேரத்தில் இதயத்தின் பாரத்தை. முதலில் கண்ணாடியை நோக்கி எனது குறைகளை என்னிடமே பகிர்ந்த ஆகச் சிறந்த நண்பன் என்றும். உனது வரிகளால் என்னை இன்று உலகம் போற்ற காரணம் என்று புத்தகத்திடமும். எத்தனையோ இரவுகள் எனது தனிமை நிறைந்த இரவு உனது வெளிச்சமே எனக்கு துணையானது என்றும். அடிக்கின்ற குளிருக்கு உனது நெருப்பே எனக்கு நித்திரை தந்தது என்றும் தனது நண்பர்களோடு இந்த இரவை பேசி தீர்த்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
