எழுத்தாளர்: விஜயலட்சுமி தங்கமுத்து
அந்தியில் ஆதவன் உதித்திட மேகம் எங்கும் தன்னிலை உருமாற்றியதே அக்கரையில் இவள் கால்பாதம் தீண்டிய கடல்நீர் தன் உவர்ப்பை நொடிப்பொழுதில் கக்கியதே. அவள் அங்கம் எல்லாம் மின்னல் ஒளி பாய்ந்து பார்ப்பவரின் விழியை ஆசுவாசம் செய்துக் கொண்டிருந்தது. அவளின் கருங்கூந்தலை காற்றும் தழுவிச் சென்று மோட்சம் அடைந்ததே. அவளின் கைகளால் திரையிட்ட ஜன்னலை விலக்கும் போது அற்புத விளக்குள் மறைந்திருக்கும் அலாவுதீனும் அவளின் அழகை இரசித்து இறைவனிடம் மனித பிறவி இப்பிறவியில் வேண்டும் என வேண்டினானே…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
