எழுத்தாளர்: விஜயலட்சுமி தங்கமுத்து
ஆயிரம் ஆசைகளோடு வாழ்க்கை பயணத்தை தொடங்கியது அவளது விழிகள் அது எல்லாம் கற்பனையாக மாறியதும் அந்திரத்தில் தொங்கியபடி ஆடிப் போனால், குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட அவளின் வாழ்க்கை அனுதினமும் கண்ணீரால் சூழப்பட்டதே. எத்தனையோ இரவுகளை அவள் கண்கள் தூக்கமின்றி துக்கத்தில் தவித்தது இவ்வளவு வலிகளை கடந்த அவளுக்கு மழைகாலம் மட்டுமே மருந்தானதே. அவள் அழும் வேளையில் தனது மழைநீர்க் கொண்டு அவளின் கண்ணீர் கழுவப்பட்டது அன்றிலிருந்து மழைக்கே காதலியானால் கண்ணீரும் மழைநீரும் சேர்ந்து காவியம் படைத்ததே…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
