எழுத்தாளர்: நா.பா.மீரா
அன்று ..பன்னிரண்டாம் வகுப்பு -ஆ பிரிவில் தாவரவியல் பாடவேளை.
மாணவர்களே! இன்னைக்கு நாம மூங்கில் வளர்ப்பு மற்றும் அதோட நன்மை,தீமைகளைப் பற்றிப் பார்க்கபோறோம் .
சுவாரசியமாக வகுப்பு சென்று கொண்டிருக்க …..வகுப்பின் நடுவே எழுந்து நின்ற அனன்யா ….மிஸ் இடையிடறதுக்கு மன்னிச்சிக்கோங்க ….
மூங்கில் நம்ம சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் வைச்சு .. மனத்தில் நேர்மறையான எண்ண அதிர்வலைகளை உண்டாக்கும்னு சொன்னிங்களே ….
அப்படின்னா… நம்ம கிராமத்துல எல்லார் வீட்டிலும் மூங்கில் வளர்த்தா கள்ளச்சாராயம் குடிக்கிற அப்பாமாரெல்லாம் திருந்திடுவாங்களா…மிஸ்.
சமீபத்தில் … கள்ளச்சாராயம் குடித்து இறந்த தந்தையின் நினைவில் .விக்கித்து நின்றாள் ஆசிரியை .
முற்றும்.