10 வரி போட்டிக் கதை: அனுபவம்

by admin 1
56 views

எழுத்தாளர்: மிதிலா மகாதேவ்

  • “ஏய் சாந்தி எப்போ பாரு சீரியல் இல்ல பக்கத்து வீட்டு பெண்ணு கூட கதையளப்பது சாப்பாட்டை மூடி வை, பாத்திரங்களை கழுவி வை என்றால் கேட்கிறாளா” என. திட்டினார் தன் மருமகள் சாந்தியை பரிமளா. 
  • சாந்தி இதை எல்லாம் காதில் ஏற்றி கொண்டு மறு காது வழியாக விட்டு விடுவாள். அவளுக்கு ஒரு பழக்கம் வீட்டையும் துப்பரவாக வைத்து கொள்ள மாட்டாள். 
  • இது அவள் அம்மா வீட்டில் தொடங்கிய பழக்கம் புகுந்த வீட்டிலும் தொடர்கிறது பரிமளா சுத்தம் பார்க்கும் ரகம். 
  • சாந்தி சீரியல் பார்த்து கொண்டு இருக்க பரிமளா வந்தவர் அவளை பார்த்து விட்டு …சாந்தி உனக்கு பல தடவை சொல்லி விட்டேன் குழந்தை இருக்கிறான் சாப்பாடு சமைத்தால் சரியாக மூடி வை என்று. 
  • நீ கேட்பதாக இல்லை ஊரில் இப்போ கண்ட கண்ட நோய்கள் வருகிறது.. நம்ம வீட்டில் கரப்பான் பூச்சி வேற அதிகம் என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறது. 
  • குழந்தை வேற இருக்கிறான் நோய் வந்து விடும் நான் சொல்வதை நீ எப்போ தான் கேட்டு இருக்க.. உனக்கு எல்லாம் பட்டால் தான் புத்தி வரும் என புலம்பி கொண்டு போனார். 
  • சாந்தி வழமை போல தன் நடவடிக்கையை தொடர பரிமளா தான் புலம்பி கொண்டு தன் பேரனுக்காக எல்லாம் பார்த்து செய்தார். 
  • சாந்தி கணவன் கணேஷ் கூட சொல்லி பார்த்தும் அவள் அலட்சியப்படுத்திய தன் விளைவு விரைவில் தெரிந்தது. 
  • அவள் ஆறு வயது குழந்தை நன்றாக இருந்தவன் தீடீரென அவனுக்கு வாந்தி, பேதி ஆகியது… சாதாரண மருந்து கொடுத்தும் கூட நிற்காமல் போக டாக்டரிடம் காட்ட அவர் இது இன்ஃபெக்ஷன் நோய் காவி தான் காரணம் என சொன்னார். 
  • சாந்திக்கு அப்போ தான் புரிந்தது மாமியார் தன் அனுபவத்தில் சொன்ன உண்மை. குழந்தை வேற கஷ்டப்பட்டு மீண்டு வர… அதன் பிறகு சாந்தி உணவு தொடக்கம் வீடு வரை எல்லாம் சுத்தமாக வைத்து இருக்க ஆரம்பித்தாள் அனுபவம் தந்த பாடம். 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!