10 வரி போட்டிக் கதை: அருணின் ஆசை

by admin 2
46 views

“டேய் அங்க என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்க? அந்த ரெண்டாம் நம்பர் ஸ்பேனரை எடுத்து போடு. ஒரு வேலை உருப்படியா செய்ரது கிடையாது. எங்கிருந்து தான் எனக்குனு வரானுங்களோ?” என்று வசவுகளை வழங்கியபடி 15 வயது அருணை வேலை வாங்கினான் முத்து.
“ஏம்பா முத்து சின்ன பையன் அவனை போட்டு இந்த கத்து கத்துர. டேய் தம்பி நீ அருண் தானே?
உங்கப்பா போன மாதம் தவறிட்டாருனு கேள்விப்பட்டேன். உங்க வீட்டை தான் தேடி அலைஞ்சிட்டு இருக்கேன். நீ என்னடா இங்கே? ஸ்கூல் போகலயா?” அதிர்வுடன் கேட்டிருந்தான் சந்தோஷ்.
“அது… அந்த வீட்டை காலி பண்ண சொல்லிடாங்க. இங்க பக்கத்தில் தான் வீடு வாடகை எடுத்துருக்கோம்” முதலாளி என்ன சொல்வாரோ என்று தயங்கியபடி பதிலளித்தான். அவன் வதனமோ சோகத்தை பூசியிருந்தது.
“உங்களுக்கு தெரிஞ்சவனா இந்த பையன். ஒரு ஸ்பேனர் கூட எடுத்து தர தெரியாது ஒரு வேலை உருப்படி கிடையாது கொஞ்சம் புத்திமதி சொல்லி விடுங்கய்யா” என்று கடை ஓனர் தன் இலக்கிலே குறியாய் இருந்தான்.
“அட போப்பா இந்த பையன் இருக்கானே அவன் 12 வயசிலேயே சைக்கிள் பைக் எல்லாம் தனித்தனியே கழட்டி மாட்டிருவான். அவங்கப்பா பெரிய மெக்கானிக். அவனுக்கு நேரம் சரியில்லை இப்ப. நான் கூட்டிட்டு போறேன் அப்புறம் வரேன்” என்று அருணையும் அழைத்து கொண்டு உந்துருளியில் வீட்டை நோக்கி சென்றனர்.
“ஏண்டா ஸ்கூல் போகாமல் இதென்ன பழக்கம்”
“அங்கிள் அப்பா போனப்புறம் அம்மா ரொம்ப டவுனாகிட்டாங்க. வீடும் இல்லை. அதான் நானே வேலைக்கு வந்து குடும்பத்தை பாக்கலாம்னு தான் அந்த கடைக்கு வேலைக்கு சேந்தேன். எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டா வேலை கிடைக்காதுனு தான் அப்படி நடந்துகிட்டேன்”
“இனிமே நீ வேலைக்கு போக வேண்டாம். நீ என்ன படிக்க ஆசைபட்டியோ அதை படி. உன்னை நான் படிக்க வைக்றேன். அம்மாகிட்ட நான் பேசுறேன்” பேசிப்பேசி வீடும் வந்தது.
“செல்வி உன் புருஷன் போய்ட்டானு இப்படி இடிஞ்சி உக்காந்துட்டா உன் பையனோட கனவுகளும் இலட்சியங்களும் இலக்கை அடையாம கானலா மறைஞ்சிடும். உன் புருஷன் நீ இப்படி இருக்கத விரும்புவானா? கொஞ்சம் நிதானமா யோசித்து எதார்த்தம் புரிந்து நடந்துக்கம்மா. அவன் ஸ்கூல் போகட்டும். நீ என் ஒய்ப்ஃ வேலை பார்க்கும் கம்பெனில ஜாயின்
பண்ணிகோ” என்றுரைத்தான்.

“ரொம்ப நன்றி அண்ணே. இனிமே இதுபோல் நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுடா அருண். நாளைல இருந்து நீ ஸ்கூல் போ” கண்ணீருடன் உரைத்த தாயை அணைத்த அருணின் வதனம் மகிழ்ச்சியை பூசிக் கொண்டது.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!