எழுத்தாளர்: கங்காதரன்
அவள் பெயர் தமிழரசி. ஏழை, படிப்பறிவு இல்லை. அதனால் பிழைக்க வேண்டும் என்பதால் நல்ல உழைப்பாளியாக இருந்தாள்.
வெளியுலக தொடர்பு குறைவு. சொந்தமாக ஏதோ ஒரு தொழில் தொடங்க ஆசை.
அவளுக்கு முதல் போட்டு தொழில் தொடங்க எந்த வசதியும் இல்லை. நன்றாக சமைப்பாள்.
அந்த திறமையை மூலதனமாக போட்டு ஒரு இட்லி தோசைக் கடையை தொடங்கினாள்.
அவள் வீட்டில் இருக்கும் திண்ணையில் கடை வைத்தாள். ஒரு மாதம் போனது, லாபம் வந்ததால் சில பொருட்களை கடைக்கென வாங்கினாள்.
திடீரென அதிகாரிகள் ஆய்வு நடத்தி சில சான்றிதழ்கள் கேட்டனர்.
கொஞ்ச கால அவகாசம் தந்துவிட்டு சரி செய்ய அறிவுறுத்தினர்.
உணவை சாப்பிட்டு ஆஹா ஓஹோ என வாழ்த்தி உடனடியாக சான்றிதழ் பெற அறிவுறுத்தினர்.
அவள் அலைந்தாள். ஒரு வழியாக சான்றிதழ் எடுக்க தேவையான அனைத்தையும் எடுத்தாள்.
பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கேட்கப் பட்டபோது PAN no கேட்டார்கள்.
உடனே அவள் புதிதாக வாங்கிய PAN (தோசைக்கல்) யை
காட்டி இந்த Bill number ஐ எழுதிக் கொள்ளுங்கள் என்றாள்.
அலுவலர்கள் சிரித்தனர். தொழில் பதிய PAN card எடுக்க வேண்டும் என்றும், PAN (தோசைக் கல்) இல்லை என்றும் கூறினர். தன் அறியாமையை எண்ணி நொந்து வெளியேறினாள்.
முற்றும்.