எழுத்தாளர்: க.ஆதிலட்சுமி
அன்றும் ஆதவன் ஆரவாரமில்லாமல் ஆகாயத்தை ஆளும்முன்..
ஆரவாரத்துடன்,ஆளாய் அவதரித்த அனைவருக்கும் அதிகாலை ஆதரவாய் அமரும் ஆசனம்.
அப்போதைக்கு அனுமதியில்லை…அல்லோலப்பட்டு அவதிக்குள்ளாகி அங்குமிங்குமாக அலைந்து அவசரம் …அவசரம்…
அடிவயிற்றில் அடங்கியுள்ள அத்தனையும் அலாரம் அடித்து அவளுக்குள்ளோர் அவதி…
அடுத்தடுத்தவர் ஆசிரமத்தில் ஆளாளுக்கு ஆதங்கத்தை அளவில்லாமல் அருகிலேயே அள்ளித்தெளிக்க அதிவேகமாயொரு அற்புதமாய் அஸ்தமமான அந்த அறை அவளுக்கு அகிலமானது.
ஆயிரமாயிரம் ஆழ்சிந்தனைகள் அவதரிக்கும் அவ்விடமே,அனைத்திற்கும் ஆகாசம்..
அன்பாய் ஆதரிக்க ஆளில்லாதவளான அவளோஅனாதையாய் அவதரித்தவள்.
அவ்வப்போது அழுகை அருவியாகும்போது அமைதிப்படுத்த அவள் அணுகுவது அவ்விடமே…..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
