10 வரி போட்டிக் கதை: அலைகள்

by admin 1
75 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது . ஆனாலும் ப்ரீதாவின் குரல் அம்சவேணியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இத்தனை வருடங்கள் தான் பொத்திக் காப்பாற்றிய உண்மைகள் மகளுக்குத் தெரிந்துவிட்டதே ! ஒரு முறை தன்னினைவற்ற சூழ்நிலையில் —- அதன்பின் பழக்கபடுத்தப்பட்ட நிலையில் —- பலமுறை உடம்பால் சூறையாடப்பட்டபோது மரக்கட்டையாகத்தானே இருந்தேன் —- ஒருவேளை மனதும் மரத்திருந்தால் இன்று ப்ரீதா நம்மைக் கேவலமாகப் பேசியதைத் தட்டிச் சென்றிருப்போமோ ? 

தண்ணீரைப் பிரிய நேர்ந்தால் மீன்கள் வாழ்வதில்லை , ஆனால் என்னையும் , நான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தையும் கறை படிந்ததாக ஒதுக்கிவிட்டாளே என் மகள் ! நான் என்ன செய்வேன் ? அடித்த அலையின் வேகத்தில் கரையில் ஒதுங்கியது அம்சவேணியின் உடல். 

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!