10 வரி போட்டிக் கதை: அழகில் ஆபத்தும்

by admin 1
57 views

எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்

ஒரு வாரம் கிடைத்த விடுமுறையை கொண்டாட நண்பர்கள் ஐவரும் சேர்ந்து முடிவு செய்தனர். ஒருவன் ஊட்டி என்க, ஒருவன் கொடைக்கானல் என்றான்.

எப்போதும் மலை பிரதேசம் தானே செல்கிறோம். இந்த தடவை அருவி இருக்கும் இடம் போகலாமா என்றான் ஒருவன். அவன் சொல்வதும் சரியென பட, ஒவ்வொரு இடமாக சொல்லி, கடைசியாக குற்றாலம் செல்லாம் என்று முடிவு எடுத்தார்கள்.

திட்டமிட்டபடி ஒரு காரில் ஐவரும் கிளம்பினர். நண்பர்கள் ஒன்று கூடினால் அவர்களின் சந்தோஷத்தை பற்றி கேட்க வேண்டுமா என்ன? ஆட்டம் பாட்டம் என்று ஒரே கலாட்டாதான்.  குற்றாலம் பக்கம் நெருங்க நெருங்க மழை சாரல் அவர்களை வரவேற்றது.

குளிருக்கு நடுங்காமல் இருக்க மதுவையும் வயிற்றுக்குள் இறக்கினர். நேராக ஐந்தருவிக்கு வண்டியை விடுடா என்று வண்டி ஓட்டும் நண்பனை விரட்டினான் ஒருவன்.

வழியில் செக் போஸ்ட்டில் நின்ற நபர் “சார் அருவில தண்ணீர் அதிகம் வருது சார். அதனால் குளிக்க விட மாட்டார்கள். உள்ளே போறது வேஸ்ட் என்றான்” அவர்களுக்கு ஐம்பது ரூபாயை மிச்சப்படுத்த.

“ஏய் எங்களை யாரு தடுக்க முடியும்” என்று போதை தலைக்கேறி ஒருவன் கத்த, “உங்கள் இஷ்டம். ஐம்பது ரூபாய் கொடுத்துட்டு போங்க” என்று வழி விட்டான். வரும் போதே இப்படி போதையில் வருகிறான்கள் என்று புலம்பியபடி.

ஓரிரெண்டு கார்கள் இருக்க, காவல் துறையினர் யாரும் குளிக்க கூடாது. கிளம்புங்க என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

வரும்போது இருந்த உற்சாகம் சட்டென்று வடிந்தது. போலீசாரிடம், “சார் ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறோம் சார். ஒரு அரை மணி நேரம் குளிக்க விடுங்க சார். அமைதியா குளிச்சிட்டு போயிடுறோம் என்று கெஞ்சினர் ஐவரும்.

காவல்துறையினரோ, “தம்பிங்களா, மேலே மழை பெய்யுது. தண்ணி வரத்து ஆதிகமா இருக்கு. இன்னும் இரண்டு நாட்கள் இப்படிதான் இருக்கும். நீங்க தலைகீழாக நின்றாலும் குளிக்க விடமாட்டோம். பேசாமல் கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு, “சரி, உங்களை பார்க்கவும் பாவமா இருக்கு இங்கு இருந்து பார்த்துட்டு போங்க” என்று  படிக்கட்டு அருகில் செல்ல அனுமதித்தார்.

நண்பர்கள் ஐவரும் மகிழ்ந்து, ஐந்தருவியை காவலர் சொன்ன இடத்திலிருந்து பார்த்து ரசித்தனர். டேய் அங்க பாருடா பாம்பு என்று ஒருவன் கத்த, எல்லோரும் அங்கு கூடி, அவன் காட்டிய இடத்தை பார்க்க, பெரிய பாம்புகள் அருவியில் இருந்து வரும் மீனை பிடித்து தின்பதற்கு சண்டை போட்டு கொண்டிருந்தது.

அனைவரும் பயத்தில் உறைந்தாலும், தங்கள் கைபேசியில் அக்காட்சியை பதிவு செய்து கொண்டார்கள். “அழகான அருவி என்று வந்தால், என்னடா பாம்பு எல்லாம் இருக்குது” என்று ஒருவன் சொல்ல, “அழகில் ஆபத்தும் இருக்கும் டா” என்றான் மற்றவன்.

பின்னர் என்ன எல்லோரும் பாடர் கடைக்கு போய் பரோடா சாப்பிட்டு விட்டு தங்கள் உல்லாசப் பயணத்தை இனிதே முடித்தனர்.

முற்றும்

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!