எழுத்தாளர்: மிதிலா மகாதேவ்
- காஷ்மீ்ர் தேனிலவுக்கு ஏற்ற இடம் அது இந்த எழுபது வயது கிழவனுக்கு எதற்கு என.. நான் வந்த வாடகை வண்டி டிரைவர் நினைக்கிறான் என அவன் பார்வையில் புரிந்தது.
- அவனுக்கு தெரியுமா நான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்ப நினைத்து பார்க்க வந்து இருக்கிறேன் என்று.
- எங்களுக்கு திருமணமாகி என் மனைவி முதல் முதலாக என்னிடம் கேட்டது ஒன்று தான்… பனி மழை பார்க்க ஆசையாக இருக்கிறது காஷ்மீர் அழைத்து போங்கள் என்று…
- அப்போ அவள் ஆசையை அலட்சிய படுத்தி விட்டு என் ஆசைக்காக பணம் இருந்தும் அவளை கொடைக்கானல் அழைத்து போனேன்.. அதை மெளனமாக சிரித்தவாறே ஏற்று கொண்டாள்.
- நாட்கள் நகர்ந்து வாரங்களாக மாதங்களாக வருடங்களாக மாறியது வாழ்க்கை ஓட்டத்தில் நாங்கள் ஓடி கொண்டு இருந்தோம்.
- பிள்ளைகள் மூவர் இரண்டு ஆண் ஒரு பெண் நல்ல படிப்பு கொடுத்தேன் அவர்கள் கேட்டதை நிறைவேற்றினேன் கல்யாணம் பண்ணி வைத்தேன்.
- அவர்கள் எல்லாம் குடும்பத்தை காரணம் காட்டி தூர போனார்கள் எனக்கு அவளும் அவளுக்கு நானும் என்று ஆனோம்.
- என் தாம்பத்திய வாழ்வை நிறைவாக தந்தவள் ஒரு நாள் நோய்யில் விழுந்தாள்… வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை என்னை தவிர்க்க விட்டு போய் விட்டாள்.
- பிள்ளைகள் வந்தார்கள் கடமை என செய்து விட்டு எங்கே பல நாள் தங்கினால்… அப்பாவை பார்த்து கொள்ளும் பொறுப்பு தலையில் விழுந்து விடும் என பல காரணம் காட்டி ஓடி போனார்கள்.
- இது தான் வாழ்க்கை இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையில் என்னவள் ஒன்றை தவிர என்னிடம் வேற ஏதுவுமே கேட்டதில்லை… அது தான் அவள் பார்க்க ஆசைபட்ட பனி பொழியும் காஷ்மீருக்கு வந்தேன் தனியாக அல்ல அவள் நினைவோடு என் இறுதி பயணத்தை தொடங்க.
முற்றும்.