எழுத்தாளர்: நா.பா.மீரா
நினைக்க நினைக்க ஒரே மகிழ்ச்சி திவ்யாவுக்கு. இன்னும் ஒரே மாதம்தான் . நம்மோட சொகுசுப் பங்களாவுக்குப் போயிட்டா எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடும் .
மனதுக்குள் நன்றிப் பெருக்குடன் அப்பாவை நினைத்தாள். ரொம்ப நன்றிப்பா உங்களாலதான் இது சாத்தியமாச்சு பழைய வீட்டுப் பிரச்சனைக்கெல்லாம் குட் பை எல்லாம் உங்க ஆசீர்வாதம்.
புது வீடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த மாடுலர் கிச்சன் திவ்யாவைக் கவர்ந்தது.
அப்பாடா இனி பூச்சி பொட்டுப் பிரச்சனையெல்லாம் கிடையாது நிம்மதிப் பெருமூச்சு திவ்யாவிடம்.
இரவு– சிலிண்டரை மூடுவதற்காக மாடுலர் கதவைத் திறந்த திவ்யாவைப் பார்த்து பரிகாசமாகச் சிரித்தது அந்தக் கரப்பான்பூச்சி.
முற்றும்.
