எழுத்தாளர்: குட்டிபாலா
பால்கனியில் நின்றிருந்த பரமேஸ்வரன் மடியில் விழுந்த அந்த கடிதத்தின் .”அன்பே இளவரசி” என்ற ஆரம்ப வரிகளால் அதிர்ந்தார். வழக்கம்போல் நடைப்பயிற்சியின்போது அபார்ட்மெண்ட்சங்கத்தலைவர் சாமுவேலிடம் ”எவனோ ப்ரின்ஸாம்” என் மகள் இளவரசிக்கு
காதல் கடிதம் எழுதி காற்றில் தூது அனுப்புகிறான். உடனே கண்டிக்க வேண்டும் நண்பா” .
சடாரென்று நின்ற சாமுவேல் “ப்ரின்ஸின் காதல் கடிதமா? அதைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன் பரமு. ‘ப்ரின்ஸ்’ என்ற புனை பெயரில் கதை எழுதுகிறேன். அந்த காகிதத்தை கொடு” என்றார் சாமுவேல்.
‘நல்லவேளை. மகள் இளவரசியிடமோ மனைவியிடமோ கேட்கவில்லை ‘ என்று மனதுக்குள் மகிழ்ந்த பரமேஸ்வரன் நடையை தொடர்ந்தார்.
நன்றி