எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
உலகில் இரு காட்சிகளே உறைநிலை கொண்டவை. ஒன்று அருவியாகிய நான் மலையில் இருந்து கொட்டுவது. மற்றொன்று கதிரவன் கடலடியில் இருந்து எழுவது. கதிரவன் கஞ்சன், சில மணித்துளிகள் மட்டுமே அதே நிலையில் காட்சி தருவான். நான் தயை நிறைந்தவள், நிம்மதி தேடி, மகிழ்வு தேடி, அமைதி தேடி வருவோருக்கு எந்நேரமும் காட்சியளிப்பேன். இதோ போன நூற்றாண்டில் இறந்தானே பாரதி, அடிக்கடி என்னிடம் வருவான், ஏதோ எழுதுவான், செல்லமாவை காதல் வயப்படுத்திவிட்டான். என்னிலிருந்து பிறந்த சுமேரியாவும், சிந்துவும் குரங்காகச் சுற்றிய கூட்டத்திற்கு வேளாண்மை சொல்லித்தந்து கூட்டமாக வாழக் கற்றுத்தந்தார்கள். அவ்வளவு பழைய கதை எதற்கு, தற்போது பாருங்கள், ஐடீ கம்பெனியில் கணினியை பார்த்தே கண்கெட்டவர்கள் எனைப்பார்க்க சோகமாக வந்து, சோடியாகச் செல்கிறார்கள். மகிழ்வளிக்கவே பிறந்துள்ளேன். மரங்களை, மலைகளை வெட்டி எனைக்கொள்ளாதீர்கள். காதலும், வாழ்தலும் நின்றுவிடும்.
முற்றும்.