எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
ரமணனின் மனம் முழுவதும் அம்மா அப்பாவின் நினைவில் ஏங்கியது.
முதல் நாள் நடந்த நிகழ்ச்சியில் மனம் இழுத்துச் சென்றது.
ரமனணின் வீடு இருக்கும் இடம் நகரத்தின் மையப் பகுதி.
அந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கும் சென்று வர பேருந்து வசதி உள்ளது.
அன்று பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது ஒரு ஆள் துண்டுச் சீட்டைக் காட்டி விலாசம் கேட்டான்.
சொல்வதற்கு முன் ரமணனை இழுத்து காருக்குள் தள்ளிக் கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.
ரமணனைக் கட்டிப் போட்டு விட்டு அவன் தந்தையிடம் அவருடைய வீட்டை ஒரு பெரும் புள்ளிக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினர்.
அவர்கள் வெளியே சென்ற பின்னர், மேசையில் இருந்த ஒரு பிளேட் ரமணணின் கண்ணில் பட பல்லில் கவ்வி கட்டை அறுத்து விட்டு தப்பிச் சென்றான்.
யாருக்கும் தெரியாமல் வீட்டை அடைந்ததும், அப்பாவுடன் சென்று அவர் போனில் ஆட்டோமேட்டிக் ரெகார்டரில் இருந்த வாய்ஸ் காட்டி மனு கொடுத்தான்.
அதில் இருந்து பிளேட் அவன் வாழ்வில் முக்கியம் பெற்றது.
நன்றி