எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன்
தன் கிழிந்து போன புடவைகளில் இருந்து மிதியடி தைத்துக் கொண்டிருந்த பவானியிடம் ,
“அக்கா.நான் அடுத்த சென்மத்துல இந்த மிதியடியாவே பொறக்கக் கூடாது.”
“பின்னே என்னக்கா.அத்தனை பேரு காலில இருக்கற தூசி,குப்பை எல்லாம் என் மேல்தான்.” என்று அழுதது.
“தம்பி. உங்களால எல்லாருக்கும் எத்தனை உபயோகம் தெரியுமா? பழசாப் போன புடவைங்கள கத்தரிச்சு பின்னி, உங்களை உருவாக்கி இருக்கேன். பூமி என்னிக்காவது அழுவுதா? “
அதைத் தவிர ஆரோக்கியமற்ற தூசிகளை உன் மேல தாங்கி, எல்லோர் நலனையும் பாதுகாக்கிற. நீ இல்லாத இடங்கள் உண்டா?
கண்களைத் துடைச்சுகிட்டு தூசிகளை வரவேற்கத் தயாராக இருந்தது மிதியடி.
நன்றி