எழுத்தாளர்: S. முத்துக்குமார்
பஸ் ல் எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் கழுத்து வரை முடி வெட்டி, ஒரே மாதிரி காதிகிராப்ட் சூடிதார் டாப்ஸ் போட்டு..எனக்குப் பிடித்த காதணிகள் பற்றி பேசியதால் நானும் கவனித்தேன். பின்னாலிருந்து பார்க்கும்போது இளவயது போல இருந்தாலும் இருவர் குரலும் கட்டையாக ஒரு மாதிரி இருந்தது..எப்படியானால் என்ன…கவனிப்போம்.. நீல டாப்ஸ், “உருண்டையான முகத்திற்கு ஜிமிக்கி தான் அழகு..ஸ்டட் சுமார் தான்” என்றாள். “ஆமாம், நீள முகத்திற்கு காதில் தொங்கினால் ஒரு மாதிரி தான் இருக்கும்…அப்புறம் எனக்கு கல் வச்சது சுத்தமா பிடிக்காது..உனக்கு?” “எனக்கும் தான், தங்கமோ வெள்ளியோ அது மட்டும் தான் இருக்கணும்…இதோ பாரு ..” என்று பிரவுன் டாப்ஸ் காட்ட, நானும் அப்போது தான் கவனித்தேன்… இவள் ஒரு காதில் தானே போட்டிருக்கிறாள்…அட, அவளும் ஒரு காதில் தான் போட்டிருக்கிறாள்..’இது என்ன புது பேஷன்’ என்று யோசிக்கும் போதே, பஸ் நிற்க, அந்த இருவரும் குறுந்தாடியோடு இறங்கி நடந்தார்கள்….
முற்றும்.