எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன்
பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்த நிஷாவிற்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. பள்ளியில் படிக்கும் போது அதிக அலங்காரம் செய்து கொள்ள தடை என்பதால் எதுவும் செய்து கொள்ளவில்லை. ஆனால் இன்று கல்லூரிக்கு முதல் நாள் செல்கிறோம் என்று நல்ல விலை உயர்ந்த உதட்டு சாயம் ஒன்றை வாங்கி அதை நன்றாக போட்டுக் கொண்டு பாட்டியிடம் வந்து “நான் முதல் நாள் கல்லூரிக்கு போகிறேன்” என்று நமஸ்காரம் செய்தாள். அவளுடைய உதட்டு சாயத்தை பார்த்து பாட்டி “ஏன் இப்படி போட்டுக் கொண்டிருக்கிறாய் இதெல்லாம் ஏதேனும் கெமிக்கல் கலந்திருக்கும் நாம் நம் வீட்டில் பீட்ரூட் வாங்கி அதை காலையிலும் மாலையிலும் உன்னுடைய உதட்டில் பூசி நன்றாக கழுவி வந்தால் நல்ல லிப்ஸ்டிக் போட்டது போல சிவந்த உதடு கிடைக்குமே” என்று பாட்டி அறிவுரை சொல்ல “ஓ சாரி பாட்டி இனி நீங்கள் சொன்ன இந்த டிப்ஸை கடைபிடிக்கிறேன்” என்று சொன்ன பேத்தியை பாட்டி அணைத்து முத்தமிட்டாள்.
முற்றும்.