எழுத்தாளர்: உஷா முத்துராமன்
கோடை விடுமுறைக்கு சிவா மனைவி நந்தினி இரு பிள்ளைகளுடன் கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு காரில் கிளம்பி சென்றார். இப்படி ஒவ்வொரு வருடமும் அங்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே தாத்தாவின் வீட்டை விற்காமல் பராமரித்துக் கொண்டிருந்தான். கிராமத்தில் திருவிழா களை கட்டியது. எப்போதும் வயதானவர் தொப்பியினை பலவித வடிவங்களில் செய்து விற்பார். அவர் சிவாவுக்கு மிகவும் பரிசியமானவர். வீட்டில் எத்தனை தொப்பி இருந்தாலும் வருடா வருடம் அவன் அவரிடம் நான்கு தொப்பி வாங்குவான் அந்த வருடம் அவரை காணவில்லை. விசாரித்ததில் வயதானவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவருடைய வாரிசாக அவர் பேரன் இப்பொழுது தொப்பி விற்கிறான் என்று சொன்னவுடன் அவனிடம் சென்று நாலு தொப்பி வாங்கி வந்தான். நந்தினிக்கு அவன் தொப்பி வாங்குவது பிடிக்க வில்லை என்றால் இரக்கப்பட்டு அவன் வாங்கியதும் வேண்டாம் என்று சொன்னால் இரக்கம் இறங்குகிறது என்று மனவேதனையடைவான் என்று அவளும் அமைதியாக கணவன் கொடுத்த தொப்பியை வாங்கி தலையில் அணிந்து கொண்டு திருவிழாவை ரசித்தாள்.
முற்றும்.