எழுத்தாளர்: சுஶ்ரீ
நான்தாங்க இருதலைத் திருகி 7/8 வெர்சடைல் ஆட்டோல இருக்கேன்.
என் ஓனர் இந்தசொட்டை மண்டையன் கருணாகரன்.
பேருதான் கருணாகரன்,இரக்கமில்லாத தடியன்.
எப்பவும் நான் தான் முக்கியமா வேணும் இவனோட வேலைக்கு என்ஜினை இறக்கினா.
போன வாரம் அந்த பழைய அம்பாசிடர் கார் என்ஜினை இறக்கினான்.
1960 வண்டி அதை ஏன் சரிபண்ணணும்.துருப் பிடிச்ச பாகங்கள்,
எண்ணை கூட போடாம என்னை வச்சு திருகினா,எனக்குவலிக்காதா?
நான் ஒத்துழைக்கலை. என்னை நெருப்புல காச்சறான்,
சம்மட்டி அடிச்சு சரி பண்றாராமாம். அடிச்ச அடில மேலே எகிரி சுழண்டு அவன் தலைல விழுந்தேன்.
ஐய்யா இப்பஆஸ்பத்திரில.
நன்றி