எழுத்தாளர்: உஷாராணி
இரயிலுக்குப் பேதங்கள் இல்லை. எல்லை அறியாத சிறு குழந்தை போல் அனைத்துப்
பிரயாணிகளையும் அணைத்துக்கொண்டு விலங்குகள் காய்கறி மூட்டைகளையும் சுமந்து
கொண்டு தேசத்தின் இடைக்கோடுகளையும் மொழியும் மதமும் கடந்து ஓடிக்கொண்டே
இருக்கிறது. இரயிலுக்கும் அதன் பாதைக்கும் மனிதர்களின் வித்தியாசம் தெரியாது என்பது
ஜாதியின் கற்பைக்காக்கிற பாதுகாவலர்களுக்குத் தெரியாது. விஜயனையும் நிருபமாவையும்
அடித்துப் ப்ரேதமாக்கி இரயில் பாதையில் போட்டார்கள் பழியைப் போட. பேதமற்ற இரயில்
அறியாமையில் ஏறி மிதித்து விட்டுப்பறந்தது. நாட்கள் கழிந்தன. விஜயனும் நிருபமாவும்
இருப்புப் பாதையில் இரு பூவாய் மலர்ந்தார்கள். ஆனால் அவை ஜாதிப்பூ அல்ல.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
