எழுத்தாளர்: இரா சாரதி
ஒரு நாட்டுப்புற தீவிரவாதி நட்ட நடு இரவில் இரயில் வந்து கொண்டிருக்க , பெரியகற்களை நகற்றி தண்டவாளத்தின் மேல் தொடர்ச்சியாக வைத்துக் கொண்டிருந்தான் . இரயில் வந்து கொண்டிருந்தது . திடீரென இவனது கண்களில் இரு பூக்கள் தண்டவாளத்தின் இடையே தெரிந்தன. உடனே இவனது மூளை நரம்புகள் சிந்தித்தன. இந்த பூக்களைப் போல எத்தனைக் குழந்தைகள் அந்த இரயிலில் வந்து கொண்டிருக்கும், தூங்கிக் கொண்டிருக்கும். ‘நம்முடைய வெறி ஆட்டத்திற்கு குழந்தைகளைப் பலி கொடுப்பதா? ‘என முடிவெடுத்து தண்டவாளத்தில் இருந்த பெரிய கற்களை திரும்பவும் புரட்டி அகற்றினான். தொடரி வருவதற்குள் தொடர்ச்சியாக வைத்திருந்த பெரிய கற்களை தக்க தருணத்தில் வெற்றிகரமாக அகற்றி விட்டான். ஆனாலும், அந்த சிறு பூக்கள் என்ன செய்யும்? உடனே பாய்ந்து தண்டவாளத்தில் உள்ளே வளர்ந்திருந்த அந்த சின்னஞ்சிறு பூச்செடிகளை மண்ணோடு வெட்டி எடுத்து வயல் வெளியில் வீசினான். காப்பாற்றப்பட்டக் குழந்தைகள் தண்டவாளத்தின் மேல் ஓடும் இரயிலின் தாலாட்டும் இசையில் தொடர்ந்து தூங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன. அவர்களுக்கு தெரியாது ஒரு இரும்பு மனிதன் ரயிலுக்கு கீழே நசுக்கப்பட்டு இறந்து போயிருக்கிறான் என்று…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
