10 வரி போட்டிக் கதை: ஈரழகு! முச்சிறப்பு!

by admin 1
68 views

எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்

பெண்: பார்த்தாயா என் உதட்டை வந்தடைந்தால் எவ்வளவு தனித்துவம் பெற்றாய்! நானே சிறப்புக்குரியவள்.

உதட்டுச் சாயம்: இல்லை, இல்லை. அழகிகள் நிரம்பிய உலகில் எனைக்கொண்டே நீங்கள் தனித்துவம் பெற்றீர்கள். நானே சிறப்பு.

பெண்: பிரபஞ்சம் முழுதும் பெண்கள். எண்ணற்றோர் உனை நித்தம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏன் அழகாய் தெரிவதில்லை!! என் அழகை கொண்டே நீ கவனிக்கப்படுகிறாய்.

உ.சா: அப்படியானால், இயல்பாய் கருமை நிறம் கொண்ட ஆயிரம்பேரில் என்னை பயன்படுத்தும் பெண்கள் தனித்தும், அழகுமாய் தெரிவதேன்?

பெண்: தனித்து என்று வேண்டுமானால் சொல், அழகு என்பதை ஏற்க இயலாது.

நான்: பாவம் இருவரும். இரு “அழகு”கள் சண்டையிட, உருவாகும் பேரழகை கண்ணிமைக்காமல் காணும் நானே கூடுதல் “சிறப்பானவன்” என்பதை அறியாமல் சண்டை செய்கின்றனர்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!