எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன்
திருமணம் முடிந்த மிருதுளா வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லாததால் மாமியார் வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டாள்.
அருகில் உள்ள தையல் கற்பிக்கும் பள்ளிக்கு சென்று முறையாக தையல் கற்றாள்.
தெரிந்தவர்களுக்கு பிளவுஸ் தைத்துக் கொடுத்தாள்.
கணவன் “நீ மிகவும் நன்றாக தைக்கிறாய்.
இந்த பழைய தையல் இயந்திரத்தை விற்று விட்டு மோட்டார் போட்ட இயந்திரம் வாங்கிக்கலாம்” என்று சொன்னதற்கு “வேண்டவே வேண்டாம் இது தான் நல்ல உடற்பயிற்சி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும்போது முழங்கால் வலி போன்றவை வராமல் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இது நல்ல சிறந்த உடற்பயிற்சி என்பதால் நான் தையல் இயந்திரத்தில் விரும்பித் தைக்கிறேன்” என்று சொன்ன மனைவியை ஆச்சரியத்துடனும் அவளுடைய சம்யோஜித அறிவையும் வியந்து பாராட்டினான் கணவன் ராகேஷ்.
முற்றும்.