எழுத்தாளர்: கவிதா பாலசுப்பிரமணி
சிவா இந்த பழத்த சாப்புடு…’ உமையாள்.‘அம்மா எனக்கு வேணாம்.அப்பா
பாருங்கப்பா”சிவா.“அவன் தான் வேணாம்னு சொல்ரான்ல?விடு
உமை.இப்பதான ரிசப்சன்ல சாப்பிட்டான்.”ரவி “நீங்க சும்மா இருங்க.வெரும்
சாப்பாடு மட்டும் சத்து இல்ல.பழங்கள் , கீரைகள், நட்ஸ் எல்லாம்
சாப்டனும்.இப்ப சாப்பிட சொல்லுங்க அவனா.”உமையாள் தன் மகனை சாப்பிட
வைக்க போராடிக்கொண்டிருந்தாள்.“ஜீஸ் குடிக்கலாம்னு தான இங்க
வந்த.குடிச்சாச்சுல? வா போலாம்”ரவி.“நா சொன்ன யார் கேக்ரீங்க?”புலம்பிய
படி கடையை விட்டு வெளியேறும் போது யாரோ பலமாக இடித்து கீழே
விழுந்தது போல் இருந்தது.“யோவ் கண்ணு தெரிலா?இப்டி வந்து விழரா?”ரவி
கோவமாக வந்தான்.“மன்னுச்சுரங்க,தெரியாம பட்டுரச்சு “கிழிந்த சட்டையுடன்
வயதானவர் நின்றார்.”தாத்தா அப்பவே வெளில போங்கனு
சொன்னன்லா.ஓனர் வந்தா திட்டுவார் போங்க”கடை பையன் பெரியவரை
வெளியேற்றினான்.பெரியவர் மெதுவாக சாலையை கடந்து தன் கூரை வீட்டை
அடைந்தார்.வீட்டிற்க்குள் நுலைந்ததும் “தாத்தா பசிக்குது .எதாவது வாங்கிட்டு
வந்திங்களா?”.இந்தாடா கண்ணு பழம் சாப்புடு.தாத்தா நாளைக்கு வேற
எதாவது வாங்கிட்டு வரேன்.சரியா?”கண்ணில் நீர் தழும்ப வாழைபழத்தை
உரித்து பேத்திக்கு ஊட்டிவிட்டார். காரில் “ ரவி கையில் வச்சுரந்த பழத்தை
காணோம்”.உமையாள்.”கவுண்டமணி மாதிரி ஏண்டி ஒரு பழத்த வச்சுக்கிட்டு
டார்ச்சர் பண்ற”ரவி கோபத்தில் கத்தினான்”.ஹா!ஹா!ஹா!”பின் சீட்டில்
இருந்து சிவா கேலியாக சிரித்தான்.அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் ஒரு
குழந்தையின் பசியை போக்கி உள்ளனர்.வயிறு நிறைந்த பின் உண்ணும்
உணவு ஒரு பருக்கையாக இருந்தாலும் அது நம்முடையது கிடையாது.
முற்றும்.