எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
கணவனை இழந்த சீதா அவரால் கிடைத்த வேலையில் இருந்து தன் ஒரே மகள் பிரியாவை நன்கு படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தாள். வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த சீதாவை அவளுடைய போனில் பிரியா அழைத்து அவள் தரவேண்டிய நகையை பற்றி நினைவு படுத்தினாள்.
பணி புரிபவரின் மகளுக்கு திருமணம் என்று எல்லோரும் பணம் கொடுத்து சீதாவை கடையில் ஏதேனும் ஒரு நகை பரிசாக வாங்க சொல்லி இருந்தனர் அதனால் கடைக்கு சென்று நடிகை தேர்வு செய்த போது தன்மகள் நகை கேட்டது நினைவுக்கு வர வருத்தத்துடன் பில் போட சென்றவளுக்கு திடீரென ஸ்பீக்கரில் 200வது பில்லுக்கு இன்று ஒரு காதணி பரிசு காத்திருக்கிறது என்று சொல்ல சீதாவின் பில் 200 வது பில் என்றும் அறிவித்து அவளை அழைத்து காதணிகளை பரிசாக கொடுத்தனர்.
மகள் கேட்ட காதணிகள் எதிர்பாராமல் கிடைக்க உடனே மகள் வீட்டிற்கு சென்று அந்த காதணிகளை கொடுத்து கடவுளுக்கு நன்றி சொன்னாள் சீதா.
முற்றும்.
