10 வரி போட்டிக் கதை: என் தங்கமே 

by admin 1
30 views

அம்மா – இன்னைக்கு என் தோழி வாணி ஒரு தோடு போட்டிருந்தா — அந்த டிசைன் அப்படியே என் கண்ணுலேயே நிக்குது …. எனக்கும் அந்த மாதிரிப் போட்டுக்கணும்னு ஆசையா இருக்கும்மா ….

மகள் ராணியின் விழிகளில் தொக்கி நின்ற ஏக்கம் …. ஊம் — அவரு சம்பளத்துல வீட்டுச்செலவே சமாளிக்க முடியல …. ஆனாலும் மகள் ஆசைப்பட்டபடி அதே டிசைனில் வாங்கிக் கொடுத்தாள் .

ராணியுடன் பள்ளி செல்லத் தயாராக வந்த மற்றொரு தோழி —-ஏய் சூப்பர்டி….அதே டிசைன் — ஆனா — வாணி போட்டிருக்குற தோடு தங்கம் டி —

அதுனால என்ன இருக்கட்டுமே — எனக்கு எங்கம்மா கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த இந்தத்  தோடுதாண்டி தங்கம் …

தோழியுடன் நடந்த மகளை ஆனந்தக்கண்ணீர் பெருகப் பார்க்கிறாள் அந்த ஏழைத்  தாய் .

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!