10 வரி போட்டிக் கதை: எப்படியும் சாத்தியம்

by admin 1
51 views

எழுத்தாளர்: கங்காதரன்

யோசித்துக் கொண்டே இருந்தான் கதிர். கடந்த வாரம் வரை இருந்த வேளையில் அவன் இல்லை. தொலைந்து போனது வாழ்க்கையா இல்லை வேலையா என்ற குழப்பத்தில் யோசித்துக் கொண்டே இருந்த கதிர் திடீரென எடுத்த முடிவு தான் தற்கொலை செய்து கொள்வது என்பது. தோல்விகள் அவனுக்கு புதிதல்ல பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் இருந்து நினைத்த படிப்பு படிக்காமல் வேறு ஏதோ படிப்பு படித்து பிடிக்காத வேலை யில் இருந்து அதிலும் சம்பாதித்து இன்றுவரையும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த 10 வருடங்களாக இருந்த ஒரே நம்பிக்கை இந்த வேலை. இப்பொழுது அந்த நிறுவனம் திவால் ஆனதால் அவன் வேலையும் பறிபோனது.  அவனுக்கென்று யாருமில்லை எனவே இறந்தபின் அவனின் உடல் கூட கிடைக்கக் கூடாது என மலை உச்சியில் இருந்து குதித்து விட முடிவு செய்தான்.அருகில் இருக்கும் மலை உச்சிக்கு செல்லும்  வழியில் அங்கிருந்த  தண்டவாளத்தில் கால் சிக்கி வெளியே வர முடியாத நாய் ஒன்றை பார்த்தான். மெல்ல மெல்ல அந்த நாயை காப்பாற்றிய பின் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு திருகு ஸ்குரு விற்கு இடையே, முழுதும் கல் நிரப்பப்பட்ட, நீரே பார்க்காத  ஒரு இடத்தில் அழகான சின்னஞ்செடி பூத்து மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது . ரயில் வரும் காலங்களிலும் தன்னை காத்து மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பூச்செடிக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர். இரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் இந்த பூச்செடி இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு இடையே நம்பிக்கையாக வளரும் பொழுது 35 வருடங்கள் வாழ்ந்து, உலகில் உடல், மன அளவில் பல  பிரச்சனைகளை எதிர்த்து இது வரை வாழ்ந்த தன்னால் இனி வாழவா முடியாது நிச்சயம் வாழ்வேன் என்ற உத்வேகம் அவனுக்கு கிடைத்தது. நன்றியோடு நாளை பார்த்தான் அவனை சாவில் இருந்து மீட்ட அந்த நாய் கடவுளாக தெரிந்தது. பாசத்தோடு அந்த செடியை பார்த்தான் என்னை போல் நீயும் வாழலாம் வா என்று அழைப்பதாக தோன்றியது. புதிய உத்வேகத்தோடு எழுந்து கிளம்பினான் கதிர்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!