எழுத்தாளர்: சுஶ்ரீ
வினோத்தின்ஆபீஸில் நிறைய பெண்கள்தான் பட்டாம்பூச்சிகளாய்
ரசிகா இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கவரும் தனி ரகம்
வினோத் விழுந்து விட்டான், அவள் கவனம் பெற படாத பாடு
அன்று ரோஜாப் பூவாய் ஸ்லீவ்லெஸ் உடையில் வந்தாள்
அப்போது அவள் மேல் கையில் பார்த்த மிகச் சின்ன டாட்டூ கவர்ந்தது
பட்டாம் பூச்சி டாட்டூ அழகென்று வழிந்தான்,சிரித்தாள்
மாலை ஒரு அழகு நிலையத்தில் வினோத்தின் கையிலும் ஒரு டாட்டூ
முழங்கை முதல் மேல் கை வரை பறக்கும் அந்த பயங்கர கழுகு
ரசிகா ரசிக்கவில்லை முகம் சுளித்து விலகிப் போனாள்.வினோத்தின் கவலை,எப்படி அழிப்பேன் இந்த நிரந்தரப் பச்சையை.
முற்றும்.