10 வரி போட்டிக் கதை: எவில்

by admin 1
57 views

எழுத்தாளர்: அனுஷா டேவிட்

” என்ன பாக்றீங்க? நான் யாருன்னு தெரிலயா? ஐ அம் தி கிரேட் டார்க் எவில்…
புரிலயா? நான் தான் டேவிட். நம்ப முடிலயா? அஞ்சிக்கும் பத்துக்கும் பஞ்சா பறந்து ஓடா
உழைச்ச அதே டேவிட் தான்..
இப்ப என் ரேஞ்சே வேற. அப்ப நல்லது செய்ய ஆசை இருந்தது. பணம் இல்லை..
இப்ப பணம் கொட்டி கிடக்கு. நல்லத விட கெட்டது தேடி வந்து நின்னு பேராசையா கண் முன்ன
நிக்கிது…
ஆசையா பேராசையானு வரும் போது என் பேராசை தி கிரேட் டார்க் எவில்லா என்னை
மாத்திடுச்சி…
இப்ப எல்லாரும் என்ன பாத்தாலே பயப்படுராங்க.. தீமைனாலே பயம் தானே…
நம்மள கீழே தள்ளி வேடிக்கை பார்த்தவன் முன்ன ஜம்முன்னு வந்து ஒரு நாள் நிக்கனும்..
அதுக்கு உழைக்கனும்.. கடுமையா உழைக்கனும்.. நல்லது கெட்டது எல்லாம் அறிந்து தெரிந்து
உழைக்கனும்… கண்டிப்பா நாம நினைச்ச இலக்கை அடைய முடியும். அதுக்கு சாட்சியா இந்த
டேவிட் தி கிரேட் எவில்லா உங்க முன்னாடி நிக்கிறேன்”
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்…
பின்னனியில் பாடல் இசைத்தது.


முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!