எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
ரவி நடந்து போய் கொண்டு இருந்த அருணாவை அழைத்தான் , கோபத்தால் சிவந்த முகத்துடன் அருணா “ஏன் பெயர் “குல்பி இல்லை” ரவி, ,குறும்புடன் “உன்னை யாரு கூப்பிட்டது? அதோ மணி அடித்துண்டு போறான் பாரு குல்பிவாலா” அவனை தான் கூப்பிட்டேன்.
பிறகு ஓடி போய் “இரண்டு குல்பி வாங்கிண்டு வந்து அவளை சாமாதானம் படுத்தினான் அவளை நினைத்தாலே ரவிக்கு ஜில்லுன்னு இருக்கும் குல்பியின நினைவு தான் வரும் , ரவி அவள் மேல் உயிராக இருந்தான், அவள் உதடில் வழியும் குல்பீயை நாக்கால் சுழட்டி தின்னும் அழகே தனி, ஜில்லென்று குல்பி வாயில் படும் பொழுது அவள் குளிர்ச்சியில் கண்ணை இறுக மூடும் அழகே இன்றளவும் பார்த்துக் கொண்டு இருக்கலாம், குல்பி ரவி வாழக்கையில் ஒன்றி
விட்டாள், அன்று ரவி கோவிலுக்கு போய் இருந்தான்,, குல்பிகாரன் பெல் அடித்துக்கொண்டு வந்தான்.
எப்பொழதும் போல் ரவி இரண்டு குல்பி வாங்கினான்,”குல்பிகாரன் கூட கண் சிமிட்டி “அவங்க வரலையா” ஏன்றான், இல்லை “எனறு தலையாட்டினான் கோவிலில் இருந்து மணக்கோலத்தில் பெண் மாப்பிள்ளை இறங்கி வந்தனர், பார்த்தால் ,அவனுடைய “குல்பியும் வேறு ஒரு மாப்பிள்ளை ரவி கையில் இருந்த இரண்டு குல்பியும் மண்ணில் விழுந்தது,
முற்றும்.
