எழுத்தாளர்: ரங்கராஜன்
சோமசுந்தரம் ஒரு சுதந்திர ப்போராட்டத்தில் பாடுபட்டவர். அவர், மனைவி, மகன் சுந்தருடன் ஒரு ஒட்டு வீட்டில் வாழ்ந்து வந்தார். மகன் சுந்தர் 9வகுப்பு பள்ளி மாணவன்.
அரசுப்பள்ளியில் படித்து வந்தான். அவன் நண்பர்கள் வீட்டைப்பார்த்த சுந்தர் நம்வீடு ஏன் இப்படி இருக்கிறது என்ற கவலையில் அம்மாவிடம் அடிக்கடி கேட்பான். அவன் அம்மா நீ படித்து பெரிய வேலையில் சேர்ந்து பெரிய வீடு கட்டு என்றாள், அப்பா சத்தியசந்தர் என்றாள்.
காலம் மாறியதில் சுந்தர் படித்து அரசுபதவி பெற்று கொஞ்ச நாள் கழித்து, வீடு வாங்க லோன் போட, அதற்கு கையூட்டு கேட்க, அது கொடுக்க மனமில்லாமல்,இருந்த ஒட்டு விட்டு மாற்றிக்கட்டி,கையூட்டு கேட்ட அலுவலரை லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் பிடித்துக் கொடுத்தான்,தன்மகனும் தன்னைப் போல் இருப்பதை கண்டு சோமசுந்தரம் சந்தோஷப்பட்டார்.
முற்றும்.