எழுத்தாளர்: பார்வதி நாகமணி
1. ” அம்மா! அங்க ஏன் இறங்கறீங்க? கரடு முரடான இடமா இருக்கே! போகாதீங்க” என்று தடுத்தான் உமேஷ்.
2.” பயப்படாதப்பா. இங்க வந்து இந்தச் செடியைப் பாரேன்” என்றாள் அம்மா.
3.” எல்லா இடத்திலேயும் தான் செடி முளைச்சிருக்கு. இந்தச் செடியில என்ன அதிசயத்தப் பார்த்தீங்க” என்றான் உமேஷ்.
4.”நீ தான் சொல்லேன். நல்லா யோசித்துப் பார்” என்றாள்.
5.” எனக்கு ஒண்ணும் தோணலையே அம்மா! நீங்களே சொல்லிடுங்களேன்” என்றான்.
6.” கரடு முரடான இடத்துல, சின்டெக்ஸ் டேங்குக்குக் கீழ இருக்குற கொஞ்சம் மணல்ல, சூரிய ஒளியும், தண்ணியும் கிடைக்காத இடத்துல, முட்டி மோதி வளர்ந்து, பூத்துச் சிரிக்கிற அந்த விதையைப் பாராட்டணும் ப்பா” என்றாள்.
7.” இதை ஏனம்மா என்கிட்டச் சொல்றீங்க?” என்றான்.
8.” முதல்ல கிடைக்கிற வேலையை ஏற்றுக்கொண்டு, நல்ல அனுபவம், நெளிவு, சுளிவுகளைத் தெரிந்து கொண்டு, பின்னர் நல்ல வேலைக்குத் தாவலாம்” என்றாள்.
9. இந்த வேலை வேண்டாம், அந்த வேலை சரியில்லை என்று படித்து முடித்து வெட்டியாக ஒரு வருடத்தை ஓட்டிய உமேஷ் சிந்திக்கலானான்.
10. அம்மாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/