10 வரி போட்டிக் கதை: ஒரு கரப்பின் அட்டகாசம்

by admin 1
49 views

எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்

டிராயிங் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது, மாலதி மிஸ் ரொம்ப
ஸ்டிரிக்ட், போர்டில் ஒரு மலையும் சூரியனும் வரைந்து இருந்தார் டிச்சர்,
மாணவர்கள், நோட்புக்கில் வரைந்து கலர் செய்ய வேண்டும் அதுவும் வாட்டர்
கலர், அதனால் ,ஒரு, சின்ன கப்பில், தண்ணீர் வைத்துக்” கொண்டு கலர் ,செய்து
கொண்டு இருந்தார்கள்”
,ஒரு கரப்பு ,கொஞ்ச நேரமாக கரும்பலகையில் நின்று கொண்டு இருந்தது,
ஆன்டினா போல் இருந்த மீசையை ஆட்டிக கொண்டு இருந்தது, அங்கும்
இங்கும் ப்ளாக் போர்டில் ஓடியது
டீச்சர் புது சித்திரம் வரைய திரும்பினார் போர்டில் கரப்பை பார்த்து பயந்து
கத்தினார், அவருக்கு கரப்பு என்றாலே அலர்ஜி பயம், கர்ப்பு பயந்து அங்கும்
இங்கும் பறக்க ஆரம்பிக்கிறது, குழந்தைகள் பயந்து ஓட ஆரம் பிக்கிறார்கள்,
ஒரு குழந்தையில் கையில் உட்காருகிறது, அந்த குழந்தை பயந்து தட்டி விடும்
பொழுது கலர் தண்ணீர் பூரா கொட்டி விடுகிறது, சுபாவுக்கு கரப்பை கண்டா
பயமில்லை, அதை பிடிக்க அவள் பெஞ்சில் ஏறி ஓடுகிறாள், அத்தனை கலரும்
தண்ணியும் ஆறு மாதிரி ஒட ஆரம்பிக்கிறது, சுபா பாகில் ஒளித்து வைத்து
இருந்த பூனை “மியாவ்” என்று கத்தி கொண்டு கரப்பை பிடிக்க களத்தில்
இறங்கியது, பூனை புஜ்ஜியும் அங்கும் இங்கும் ஓடுகிறது, பூனையை பிடிக்க
குழந்தைகள் ஓடுகிறார்கள், ஒரு குழந்தை சறுக்கி விழுகிறது, முகம் பூரா கலர்
தண்ணீரும் கலரும், ஒரு குழந்தை விழுந்தவுடன் அடுத்தடுத்து பல குழுந்தைகள்
கால்,,தடுக்கி ஒன்றின் மேல் ஒன்றாக விழுகிறது, கரப்பு பிடிக்க யாருமில்லை
என்ற தைரியத்தால் இன்னும் வேகமாக அங்கும் இங்கும் ஓடுகிறது,,சுபாவும்
விடாமல் பெஞ்சில் ஏறி தாவி தாவி கரப்பை பிடிக்க ஓடுகிறாள் அவள்
பின்னே புஜ்ஜியும் தாறுமாறாக ஓடுகிறது, புஜ்ஜி உடம்பெல்லாம் கலர்,
சுபாவும் கலரில்,,குளித்தது பொல் இருந்தாள், ,
டிச்சர் பிரமை பிடித்து கரப்பை பிடிப்பதா, சுபாவை பிடிப்பதா, புஜ்ஜியை
பிடிப்பதா இல்லை கலர் தண்ணிரில், விழுந்து நீந்தி கொண்டு இருக்கும்
குழந்தைகளை தூக்குவதா என்று நின்று கொண்டு இருக்கிறாள்,
இந்த சமயத்தில் பக்கத்து வகுப்பில் என்ன சப்தம் என்று பார்க்க
பிரின்ஸிபால் சகுந்தலா வந்தார்,

இது என்ன வகுப்பா இல்லை சந்தைகடையா” ?
Silence என்று கத்தினார், சப்தம் கேட்டு கரப்பு பறந்து போய தலையில்
அமர்ந்து விட்டது, ஒரு கரப்பு பறந்து வந்து தலையில் அமர்ந்தவுடன்
பிரின்ஸிபால் பயந்து ஓடி விட்டார், பிரின்ஸிபால் பயந்து,,ஓடறதை பார்த்து
வகுப்பே”,,சிரித்தது,
கரப்பு டாடா காண்பித்து ,விட்டு பிரின்ஸிபால் தலையில், ஜம்மென்று அமர்ந்து
போய் விட்டது

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!