எழுத்தாளர்: சுதா கணபதி
விக்கி விக்கி அழுத ஆசை மனைவி மகிமாவைப் பார்த்து பதறிய அருண் “என்ன ஆயிற்று என்று சொன்னால்தானே தெரியும் “ என்றபடி அவளை அணைத்தான் .
நீங்கள் நம்ம வெட்டிங் டேக்கு ஆசையா வங்கிக் கொடுத்த அமெரிக்கன் டைமண்ட் தோடுல ஒன்றைக் காணோம் .ஒற்றைக் கல் என்றாலும் எவ்வளவு ஜொலிப்பா இருக்கும் “ மீண்டும் விசும்பிய மகிமாவிடம் “இவ்வளவுதானே ?
ஊர்ல யாருக்கோ ஏதோவென்று பயந்துட்டேன் . “நீங்க வங்கிக் கொடுத்த முதல் நகை . ஜோடி இல்லாத ஒத்தைத் தோடைப் பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு .” “ இடது காதுல ஒரு சிங்கிள் ஸ்டோன் தோடு போட்டுக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை . ஒரு கல்லுல ரெண்டு மாங்கா ! உனக்கு புது ஜோடி கம்மல் .
எனக்கு சென்டிமென்டான பழைய ஒத்தைக்கல் .எப்படி அய்யா பிளான்? கிளம்பு, ஸ்வர்ணா நகை மாளிகைக்கு இப்பவே .மகிமாவின் முகம் அமெரிக்கன் டைமன் கல் போல பிரகாசித்தது .
முற்றும்.