10 வரி போட்டிக் கதை: ஓடு

by admin 1
88 views

வீட்டின் பின்புறம் தோட்டத்தில் காய்கள் பறித்துக் கொண்டிருந்த ஜெயா, ஏதோ சத்தம் கேட்டவளாய் வெளியே எட்டிப்பார்த்தாள்.

சித்தி எங்கவீடு இனி ஒழுகாது நாங்க புது ஓடு போடபோறம்ல அதான் சொல்ல வந்தேன் என மழலை மொழியில் கூறினாள் ஏழு வயது சிறுமி ஜெயாவின் அக்கா மகள் பிரமி.

என்ன புள்ள சொல்ற இப்ப அதுக்கு ஏது பணம் என்றாள் ஜெயா.

என்ன சித்தி உனக்கு ஒண்ணுந்தெரியல அதான் ஓட்டு போடுறதுக்குனு பணம் கொடுக்கிறாங்களாம்ல.

நான் கேட்டேன் அப்பா கிட்ட ஐயாதுரை மாமா பேசினத என்றாள் மழலை மாறா மொழியிலே பெரிய மனுச தோரணையில்.

என்னதான் பேசிகிட்டாங்களாம் என புரியாதவளாய் கேட்டாள் ஜெயா.

ஹும் எலே செல்வராஜி நீயும் உம்பொண்டாட்டியும் மறக்காம எங்க சின்னத்துக்கு போட்டுருங்க.

 நான் ஓட்டுக்கான பணத்த கொடுத்துடுறேன்னு சொன்னத நான் கேட்டுட்டன்ல என்றாள் விவரமாய் பேசுவதாய் எண்ணிக்கொண்ட பிரமி.

இப்போது ஜெயா வாயடைத்து தான் போனாள்.

விளக்கம் சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பாளே இந்த சின்னப்பெண் என்ற சிந்தனையாய்….

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!