10 வரி போட்டிக் கதை: ஓநாய் மனிதர்கள்

by admin 2
95 views

முதுநிலை மேலாளர் முகேஷ் வரச்சொல்லியதாக பியூன் ரங்கசாமி கணேசிடம் சொல்ல, கணினியை தற்காலிக லாக் செய்துவிட்டு, அவருடைய அறைக்கு சென்றான். அந்த வங்கி கிளையில், அவன் வேலைக்கு சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. அணைத்து
வேலைகளும் அவனுக்கு அத்துப்படி. கிளையின் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை புதிய அதிகாரிகளுக்கு பகிர்வது கணேசன் தான். செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாடுள்ளவன். இரண்டு நாட்களுக்கு முன்பு கிளையில் ஜாயின் செய்து இருந்த முகேஷ் எப்படியாவது வருமான வரி பிடித்தம் பற்றிய ஸ்டேட்மெண்டுகளை தயார் செய்து அனுப்பிவிடவேண்டும் என்று. அவனுக்கு சொல்லியிருந்தார். வேலை முடிந்து விட்டது..
கணேசன் மேலாளர் அறையை நெருங்கவும், அறைக்குள் விவேக் முகேஷிடம் பேசியது கேட்டது. “கணேசனை நம்பாதீங்க சார் . நல்ல வேலைக்காரனா இருந்தாலும், அவன் நம்ம சாதி இல்லை. நீங்க அதையும் மனசுல வச்சிக்கோங்க”. கணேசன் புன்முறுவலுடன் அறையின் வலது புற சுவற்றை பார்க்க, அதில் மாட்டியிருந்த ஒரு படத்தில் ஒரு ஓநாய் கோரைப்பற்களுடன் காட்சியளித்துக்கொண்டு இருந்தது.

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!