எழுத்தாளர்: மாலா மாதவன்
“டேய்..இன்னிக்கு ராவு தூங்கிடாம சன்னல் பக்கமா கரெக்டா வந்துடு!”
வாசப் பக்கம் போனா வெளக்கமாத்த வைச்சே சாத்திப்புடுவாங்க!”
“ என் உடம்பு கொஞ்சம் பெருத்துருச்சு எசமான்.
” நீ வேற ஏண்டா வகுத்தெரிச்சல கொட்டிக்கற! பார்த்துட்டா ஒரே போடு
தான்!”
இரவு பதினோரு மணி. கடிகார பெண்டுலம் இரண்டு முறை அடிக்க வீட்டு
உரிமையாளர் தன் மனைவியுடன் உறங்கச் சென்றார்.
படுத்தவுடன் நித்திரை அணைத்துக் கொள்ள சன்னல் வழி நடந்தது எதுவும்
அவர்கள் காதுக்கு எட்ட வில்லை.
“எசமான்! யாரும் பார்க்காம நாம உள்ளாற வந்ததில் எனக்கு அப்படியே
சந்தோஷத்துல டேன்ஸ் ஆடணும் போல இருக்கு!”
“இநத வீட்டுக்காரங்க சுத்த சோம்பேறிங்க! தோ பார்! சுத்து முத்தும் பார்த்து
எல்லாம் சப்ஜாடா எடுத்துடணும்!”
“எசமான்.. மோசம் போயிட்டோம்.. வீடு தொடச்சுப் போட்ட மாதிரி ஒரே
நாத்தமா கிடக்கு.”
மூக்கிலேறிய மணம் இருவருக்கும் மயக்கத்தையூட்ட விடிகாலை வந்த
உரிமையாளர்..
“சை! இவ்வளவு மருந்தடிச்சும் வந்திருக்குங்க சனியன்கள்!” என அந்த இரு
கரப்பையும் வெளக்குமாத்தால் எடுத்து வீட்டின் குப்பைத் தொட்டியில்
சேர்த்தார்.
முற்றும்.
