எழுத்தாளர்: வர்ஷணா ஸ்ரீ
ஒரு பெண் மழையை இரசித்தப்படி சாலையோரத்தில் நடந்து செல்கிறாள். மழையில் நனைந்த ஓவியத்தில் வண்ணங்கள் நீரில் கரைவது போல ஆடையில் உள்ள வண்ணங்கள் கரைய வண்ணமில்ல ஓவியம் போல தோன்றுகிறாள். அப்பெண் இமைகளை மூடி இறைவனிடம் கேட்கிறாள்…என் இமை மூடும் முன் என் காதலனை காணவேண்டும்.. அந்த நொடியே ஒரு அதிசயம் நிகழ்கிறது. கருமேங்களுக்கு இடையில் ஒரு ஒளி போல அழகிய ஆண் அப்பெண்ணை நோக்கி வருகிறான். என் காதல் தேவதையே இமைகளை திற என்று கூறுகிறான். இமைகளில் நீர் சொட்டசொட்ட அந்த ஆணை பார்க்கிறாள்.நீ யார்?… என்று அந்த ஆணை பார்த்து கேட்கிறாள் .. அதற்கு அந்த ஆண் உன் விழி பார்த்து மயங்கி உன்னை காதல் செய்ய வந்த காதலன் நான் என்கிறான்.அப்பெண் மீண்டும் கண்களை மூடி இறைவனே நன்றி என் விழி மூடும் முன் என் காதலனை பார்த்துவிட்டேன்..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
