10 வரி போட்டிக் கதை: கண் கண்ணாடி

by admin 2
68 views

“சார் இந்தாங்க அவங்க ஆர்டர்”

“3800 ரூபாய். கேஷா, ஜிபே வா சார்”

ஓ .ஆன்லைன்ல நான் ஆர்டர் பண்ணேன் கண் கண்ணாடி வந்திருச்சா” 

“ஜி பேல அனுப்பி வைக்கிறேன்”

பணம் வந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு ஆர்டரை கொடுத்தார் டெலிவரி பாய். 

ஆர்வத்துடன் பிரித்தார் கண்ணுசாமி. இவர் கொடுத்த பிரேமுக்கு பதிலாக வேறொன்று உள்ளே இருந்தது. புகைப்படத்தில் இருந்தது போன்று இல்லாமல் ஃபிரேமும் தரமற்றதாக இருந்தது. 

“திருப்பி அனுப்பி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது மனைவி கண்ணாடியை வாங்கி பார்த்து நக்கலாக சிரித்தார். “உள்ளூர்ல கடை வைத்திருக்கிறவங்க கிட்ட இதைவிட நல்லதாக இருக்கு. 200 ரூபாய் 300 ரூபா விலை குறைவு அப்படிங்கறதுக்காக மகா மட்டமா வாங்கி இருக்கீங்களே. உங்க சிக்கனத்துல போட்டு அடிச்சாங்க.”என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் சென்றார். 

கண்ணுசாமி ஆர்டரை கேன்சல் செய்யும் முயற்சியில் அலைபேசியை இயக்கிக் கொண்டிருந்தார். ஆன்லைனில் வாங்கிய அலைபேசி ஹேங் ஆகிஅவருக்கு ஒத்துழைக்க மறுத்தது.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!