எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ்
ஆர்ப்பரிக்கும் கடல் ஆதவனின் அணைப்பில் …தகதகவென மின்னியது கடற்கரை ஓரமாக ,தங்கநிறத்தில் மங்கை ஒருத்தி ஒயிலாக நடந்துவந்தாள். உடலுக்கு வலிக்குமோ என ஆடைஉடலில் பட்டும் படாமலும் காற்றில் அலைமோதியது .கழுத்தணி மேலும் அழகுசேர்த்தது. அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்து, நிகழ்ந்ததுபோலிருந்தது. கதவு தட்டும் சத்தம் கேட்டுஉறக்கம் களைய தன் கிழிந்திருந்த ஆடைகளை மறைத்துஒதுக்கி விட்டு கதவைத்திறந்தாள்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
