எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
அரையாண்டு தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்திருந்தான் செல்வம்.
தேர்வு அறிக்கையில் அப்பாவிடம் கையெழுத்து வாங்க பயமாக இருந்ததால்
காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் கட்டினால் போட்டுவிடுவார் என்று
காலையில் அப்பாவிடம் நீட்டினான். அதேபோல அவசரத்தில் மேலோட்டமாக
பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு சென்றார். நிம்மதியாக இருந்த மகனிடம்
இரவு உணவு முடிந்ததும் “நானும் இப்டிதான் எங்க அப்பாவை ஏமாத்துவேன்.
அப்போ சந்தோசமா தான் இருந்துச்சு. இப்போ நீ பண்ணும்போது தான் அந்த வலி
தெரியுது. ஏமாத்துறதா நெனைச்சு ஏமாந்துறாத. இந்தா வாழைப்பழம் சாப்டு.”
என்று சொல்லி அழுகிய பழத்தை அவர் எடுத்துக்கொண்டு நல்ல பழத்தை
கொடுத்து “நல்லா கனிஞ்ச பழம்தான் ருசி அதிகம், அப்டினு எங்க அப்பா
சொல்லுவார். இப்போதான் தெரியுது அந்த ருசி.” என்று சொன்னார். மகனின்
உள்ளமும் கனிய தொடங்கியது.
முற்றும்.