எழுத்தாளர்: தஸ்லிம்
“புடிக்கல புடிக்கல உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா” என்று கயல்விழியை திட்டி கொண்டிருந்தான் அவளின் மாமன் தர்ஷன்..
“ஏன் மாமா என்னை திடீர்னு பிடிக்காம போச்சு. இத்தனை நாளும் நீ தான் என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருந்த” என்று அழுகையுடன் சொல்ல..
“அதெல்லாம் அப்போ ஏதோ வயசு கோளாறுல சொன்னது.. யோசிச்சு பார்த்தப்போ தான் புரியுது.. என் புள்ளைக்கும் இதே குருட்டு கண்ணு வந்திருச்சுனா என்ன பண்றது” என்று கேட்க அவள் துடித்து போனாள்..
“சரி மாமா உனக்கு இப்போ என்ன? எனக்கு கண்ணு வரணும் அவ்வளவு தான நான் ஆபரேஷன் பண்ணிக்கிறேன். இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்குவ தான”..
“அதை பார்வை வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.. அப்புறம் உன்னை விட்டு பிரியவே மாட்டேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட.. அவன் சென்று விட்டான் என்று நினைத்து, “கண் இல்லைன்னா நான் உனக்கு வேணாமா மாமா” என்று அழுத கயல்விழியை வாயிலில் நின்று வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தான் இன்னும் சில மாதங்களில் கேன்சரால் மரண விளிம்பை தொட்டுக் கொண்டிருக்கும் தர்ஷன்..
அவள் சொன்னபடி அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு கயல்விழிக்கு பார்வையும் வந்து சேர்ந்தது.. அவள் முதலில் பார்க்க நினைத்த தர்ஷன் அங்கு இருக்கவில்லை.. என் மாமா எங்கே என்று அழுது கொண்டிருந்தவளுக்கு முன்பாக தர்ஷன் அம்மா சாவித்திரி கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தார்.. என்ன என்று புரியாமல் அவள் கண்ணாடியையும் அவரையும் மாறி மாறி பார்க்க, “அவன் கண்ண தான் உனக்கு வச்சிருக்கு” என்று சொல்லி விபரத்தை சொன்னதும் துடி துடித்து போனாள்.. அன்றிலிருந்து அந்த நீல விழிகளுக்கு சொந்தக்காரனான தர்ஷன் அவளுடன் வாழ விட்டாலும் அவளுக்குள் வாழ்ந்தான்..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
