எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
கோதை, இரவு உணவு தயார் செய்வதற்காக கிச்சனில் விளக்கை போட்டதும், கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து இன்று உங்களுக்கு முடிவு கட்டுகிறேன் பார் என்று வேலைகளை முடித்து கிச்சன் முழுவதும் “ஹிட்”அடித்துவிட்டு வந்து படுத்தாள். உடனே தூங்கி விட்டாள். கனவில், அம்மா என்னை மாதிரி அதுகளும் ஒரு உயிர் தானே எனக்காக நீ பார்த்து பார்த்து சாப்பிடுகிறாய், அதற்கு யார் செய்து கொடுப்பார்கள் என்று குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் 5 மாத கர்ப்பிணியான கோதை. கிடுகிடு என கிச்சனுக்கு சென்று சோப்பு தண்ணீர் விட்டு மேடையை கழுவி விட்டாள் கரப்பான் பூச்சி உயிர் வாழ.
முற்றும்.