எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
கவிதா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் பள்ளியில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மிஸ் சுகந்தி, அவள் அம்மா சாருவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினாள். அடுத்த முறை மாதவிடாய் வந்ததும் கவிதா, சாருவிடம் நான் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன், நாப்கின் வைத்தாலும் அதையும் மீறி கரை ஆடைகளில் படிகிறது என்றாள். சாரு அன்று இரவே தன் வீட்டின் அருகே கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் ஜனனியிடம், கவிதாவை அழைத்துச் சென்றாள். அவள் மாதவிடாய் கோப்பையை பற்றி சொன்னதுடன், அதை உபயோகிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தாள். அடுத்த நாள் மாதவிடாய் கோப்பையை வைத்துக்கொண்டு கவிதா சந்தோஷமாக பள்ளிக்குப் புறப்பட்டாள்.
முற்றும்.
