10 வரி போட்டிக் கதை: கழிப்பிடம்

by admin 1
81 views

எழுத்தாளர்: உஷாராணி

அந்தத் திருவிழாக் கூட்டத்தில் கலவரம் ஏதும் நிகழ்ந்து விடாமலிருக்கக் காவல்
துறை நான்கு பேரை அனுப்பியிருந்தது. கணேசன், செல்லத்துரை, ரியாஸ்
மற்றும் கோவிந்தன். இந்த நாலு பேரை மீறி முதல் கல் கூட்டத்தில் வந்து
விழுந்தது. தொடர்ந்து ஒரு செருப்பு. இந்தக் கல்லுக்கும் செருப்புக்கும் முதலாளி
யார் என்று தெரிவதற்கு முன்பே முக்கியமாகக் காவல் துறைக்கும்
தெரியுமுன்பே அடுத்த கற்களும் வெரைட்டி செருப்புகளும் சாராய
பாட்டில்களும் வீசிக்கொண்டு பறந்தன. கட்டுப்படுத்தத் திணறிக்
கொண்டிருந்தது காவல் . வன்முறை தாங்க முடியாமல் அங்கங்கே பிய்த்துக்
கொண்டு வகை தெரியாமல் ஓடி ஒளிந்தது கூட்டம். பக்கத்தில் பொதுக்
கழிப்பிடம் நாலு பேருக்கு அடைக்கலம் கொடுத்தது. கல் எறிந்தவனும் எறியப்
பட்டவனும் ஒன்றாக உள்ளே.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!