10 வரி போட்டிக் கதை: காதல் பரிசு

by admin 1
55 views

“அம்மா என அழைத்து கொண்டு வந்தாள் பிரவீணா… சமையலறையில் தோசை வார்த்து கொண்டு இருந்த ஜனனி திரும்பி பார்த்தாள். 

“அம்மா அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை வருகிறது… எங்க ஸ்கூலில் பெரிதாக இதை செய்வோம் உனக்கு தெரியும் தானே” என்றாள். பிரவீணா 

“தெரியும் மா இப்போ எதற்காக இதை என் கிட்ட சொல்கிற பணம் ஏதும் கொடுக்க வேணுமா பாப்பா…காலையில் அப்பா ஆபீஸ் கிளம்ப முன் கேட்டு இருக்கலாம் தானே” என்றாள். ஜனனி 

“அது எல்லாம் அப்பா போன வாரமே தந்து கட்டி விட்டேன் மா..நீ தான் மறந்து விட்ட இது வேற நான் சரஸ்வதி பூஜையில் பாட போகிறேன் எனக்கு புது பாவாடை தாவணி ,வளையல், ஜிமிக்கி கம்மல் வேணும்” என்றாள். பிரவீணா 

“சரி பாப்பா அப்பா வந்தவுடனே நம்ம போய் வாங்கி வரலாம் என்றாள் ஜனனி… ஓரேய பெண்ணு அவள் கேட்டு இது வரைக்கும் ஜனனி, அவள் புருஷன் சங்கரன் மறுத்தது இல்லை. 

மாலை வேலை முடிந்து களைப்பாக சங்கரன் வந்தாலும் கூட… மகள் ஆசைபட்டதை நிறைவேற்ற மனைவி, மகளை அழைத்து போய் வாங்கி கொடுத்தான். 

பிரவீணாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை அவள் தப்பாக பொருள் கேட்கும் பெண்ணும் அல்ல…அவள் கேட்டது எல்லாம் கிடைத்தது ஒன்றை தவிர ஜிமிக்கி .

அவள் மஜந்தா உடை நிறத்திற்கு கிடைக்கவில்லை… அவள் அதை அன்னையிடம் சொல்லி வருத்தப்பட்டு விட்டு ஸ்கூல் கிளம்பினாள் அவள் போன பின் ஜனனி தன் பீரோவை திறந்தாள். 

 புடவைக்கு கீழே மறைத்து வைத்த ஒரு பெட்டியை திறக்க அதில் அழகான மஜந்தா வண்ண ஜிமிக்கி இருந்தது… அது அவள் இறந்த போன காதலன் பிரவீண் ஆசையாக கொடுத்தது விதி வசத்தால் அவனை விபத்து ஒன்றில் இழந்தவள்…. அத்தை மகனை திருமணம் செய்து அவனுக்கு உண்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். 

அவன் காதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தான் மகளுக்கு அந்த பெயரை வைத்தாள்…இப்போ அவன் தந்த பரிசு அவன் பெயர் கொண்ட மகளிடம் கொடுக்க எடுத்து வைத்தாள்.முதல் காதல் உயிர் இருக்கும் வரைக்கும் இதயத்தில் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டே இருக்கும். 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!