எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன்
டிசம்பர்– 20 இயேசு பிறந்த நாள் டிசம்பர்-25 வருவதால் ,அன்று மாதாக் குப்பத்தில் உள்ள சர்ச்-இல் கிருஸ்துமஸ் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதனை அவ்வூர் மக்களே ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வேலையையும் பிரித்து செய்கிறார்கள்.அந்த குழுவிற்கு ஒரு தலைவர் இருப்பார்.அவர் தான் அந்த குழுவை இயக்குபவர்.
அதில் ஒரு தலைவர் தான் “ஆரோக்கிய ராஜ்”.அவரது குழுவில் மொத்தம் 5 பேர் இவருடன் சேர்ந்து மொத்தம் 6 பேர். அவர்களில் ஒருவன் “ஸ்டீஃபன்” 5 ஆம் வகுப்பு மாணவன்.இவன் மட்டும் இல்லாமல் இவனுக்கு பிடித்த “ ஜோசப் “ மற்றும் ” சிந்தியா “.இவர்கள் மூன்றாம் வருடக் கல்லூரி மாணவர்கள்.இவர்களை ஸ்டீஃபன்- க்கு ரொம்ப பிடிக்கும்.ஏனென்றால் , இவர்கள் யாராக இருந்தாலும் அன்பை அதிகமாக தருவார்கள். ஸ்டீஃபன் இவர்களை தூரத்தில் இருந்து மட்டுமே கவனிபான்.இவர்களிடம் பேச ஆசைத்தான் ஆனால் இதுவரைப் பேசியதில்லை.இப்போது இவர்களுடன் கோவில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறான்.
சிந்தியா மற்றும் ஜோசப் நல்ல நண்பர்கள் என்று பேர் எடுத்தார்கள்.ஆனால், அதுவே பிறகு காதலாக மாறியது.இருவரும் கடந்த ஒரு வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.ஆனால் பிறர் இவர்களை நண்பர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் பெற்றோர்கள் கூட அப்படி தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று எல்லோரும் அவர்களுக்கு கொடுத்த வேலைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.ஜோசப் சிந்தியா ஒன்றாக ஒரு இடத்தை சேர்ந்து சுத்தம் செய்தார்கள்.ஸ்டீஃபன் அவர்களிடம் சென்று உங்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்டான். சரி, வாடா தம்பி எங்களுக்கு உதவி செய் என்று சிந்தியா அவனுக்கு வேலைக் கொடுத்தாள்.ஸ்டீஃபன்–க்கு ஒரே சந்தோஷம்.மகிழ்ச்சியாக அந்த இடத்தில் வேலைப் பார்தான்.
எல்லோரும் செய்துக் கொண்டே இருக்கும்போது சிந்தியா முடியைப் பிடித்து யாரோ இழுத்து கோவில் – க்கு வெளியே சென்றார்கள்.சிந்தியா வலியில் கதரினாள்.இவள் கதருவதைக் கண்ட ஸ்டீஃபன் மற்றும் ஜோசப் திரும்பி பார்த்தார்கள்.ஸ்டீஃபன் இருந்த இடத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.ஜோசப் சிந்தியா – வை நோக்கி ஓடினான்.அவளை இழுத்து சென்றது யார் என்று பார்த்தால் , வேறு யாருமில்லை அவளுடைய அம்மா.இவன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
அவளை போட்டு அந்த அடி அடிக்கிறார்கள்.ஜோசப் சென்று காரணம் என்ன வென்று கேட்டான்.அவள் எதையும் கூறாமல் அடித்துக்கொண்டே இருக்கிறாள்.அவன் கொஞ்ச நேரம் கேட்டு கொண்டே இருக்கும் போது அவன் முகத்தில் greeting cards சிலவற்றை எடுத்து அடித்தாள்.அடித்ததும் இதெல்லாம் என்னவென்று அவனிடம் கேட்டாள்.இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிதான்.
பிறகு சிந்தியா – வோட அண்ணன் எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்து ஜோசப் – ஐ எட்டி உதைத்தான். ஜோசப் உருண்டு விழுந்தான்.இவர்கள் காதலிப்பது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று நன்றாக அவர்களின் கோபத்தில் தெரிகிறது.சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு தடுத்தாலும் அவளுடைய அண்ணன் ஜோசப் – ஐ அடிப்பது நிறுத்தவில்லை.சிறிது நேரம் கழித்து விஷயம் அறிந்து ஜோசப் உடைய அப்பா அங்கு வந்து சிந்தியா உடைய அண்ணனை அடிக்க ஆரம்பித்தார்.இரு குடும்பமும் மாறி மாறி அடித்துக் கொள்வதும் திட்டிக் கொள்வதுமாக சில நேரம் நிகழ்ந்தது.ஜோசப் மற்றும் சிந்தியாவும் அழுதுக் கொண்டே இருந்தார்கள்.
இவர்கள் இருவருக்கும் நன்றாக புரிந்தது இவர்கள் சேரமுடியாது என்று. ஏனென்றால் , இவர்களின் காதலுக்கு அவ்வளவு எதிர்ப்புகள்.
இருவரும் அவரவர் முகங்களைப் பார்த்து அழுதார்கள்.இவையெல்லாம் ஒரு ஓரமாக நின்று ஸ்டீஃபன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அவனுக்கும் கண்களில் தண்ணீர் கொட்டியது.
அன்று இரவு 10.30 மணி இருக்கும், ஸ்டீஃபன் – க்கு அவனுக்கு சிறு நீர் வந்ததால் முழிப்பு வந்தது.எழுந்து வெளியே வந்தான்.தூக்கக் கலக்கத்தில் அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தடியில் கழித்தான்.அப்போது நேரே கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் கொஞ்ச தூரத்தில் ரயில் பாதைத் தெரியும் . இவன் பார்க்கும்போது யாரோ இருவர் அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.பார்பதற்கு ஜோசப் மற்றும் சிந்தியா போல் தெரிந்தது.இவன் கண்களைக் கசக்கி பார்த்தான்.இவனுக்கு நன்றாகத் தெரிகிறது அது அவர்கள் தான் என்று.இவனுக்கு அவர்கள் அங்கே நிற்பது சரிபடவில்லை உடனே அவன் வீட்டிற்கு சென்று வேகமாக அவனுடைய பெற்றோர்களை எழுப்பினான்.அவர்களும் உடனே எழுந்து வந்தார்கள்.அவர்களைப் பார்த்துவிட்டு இவர்களுக்கும் சரிபடவில்லை.கத்திக்கிட்டே அவர்களை நோக்கி ஓடினார்கள்.ஸ்டீஃபன் – உம் வேகமாக அங்கு கூட ஓடினான்.இவர்கள் கத்திக்கிட்டே ஓடியதால் அவ்வூர் மக்களும் சிலபேர் ஓடி வந்தார்கள்.அதற்குள் ஒரு வேகமாக ஒடும் மின் தொடர் வண்டி அவர்களை மோதியது.ஸ்டீஃபன் அதைக் கண்டு அதிர்ச்சியில் நின்று மண்டியிட்டான்.ஊர்மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.ரயில் போனது அந்த இடத்தில் சென்று பார்த்தார்கள்.அவர்களின் உடல் தூக்கி வீசப்பட்டிருந்தது.உடனே காவல் துறைக்கு அழைப்பு விடுத்தார்கள்.ஸ்டீஃபன் அவ்விடத்தில் அழுதுக் கொண்டே அவர்களின் நினைவைக் கண்டு அழுது கொண்டிருந்தான்.அப்போது ஒரு காவலருக்கு ஒரு கடிதம் தண்டவாளத்தின் ஓரம் கிடைத்தது.அந்தக் கடிதம் மேல் இருந்த கள்ளை எடுத்து தூக்கிப் போட்டுவிட்டு அதை எடுத்து படித்தார்.அதில் “ எங்கள் காதல் சேர மனித பிறவி ஏற்கவில்லை.நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம் இப்பிறவியில் எங்களால் முடியாது என்று எங்களுக்கு நன்றாக தெரிகிறது.எங்கள் காதல் உண்மையாகவும் வலமாகவும் இருந்தால் இன்னொரு பிறவி எடுப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது.அதனால் நாங்கள் இந்த பிறவியில் இருந்து பிரிகிரோம்.நன்றி” என்று எழுதி இருந்தது.இதனை ஸ்டீபன் – உம் கேட்டான்.கேட்டதும் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒரு வாரம் கழித்து ஸ்டீஃபன் பள்ளி – க்கு செல்ல புறப்பட்டான்.அதற்கு தடவாளம் கடந்து தான் செல்ல வேண்டும்.அதைக் கடக்கும் போது அவனுக்கு அந்த இருவர் ஞாபகம் வந்தது.அவர்கள் இறந்த இடத்தில் அவன் பார்த்தபோது, அந்த கடிதம் இருந்த இடத்தில் இரண்டு அழகான மலர்கள் வளர்ந்து காட்சி அளித்தன.இவனுக்கு அதைப் பார்த்ததும் இவனைப் பார்த்து சிரிப்பது போல் தெரிந்தது.இவனுக்கு ஜோசப் சிந்தியா சிரிப்பது போல் தெரிந்தது.இவனுக்கு ஒரு மன நிறைவு ஏற்பட்டது.இவர்கள் அந்த மலர்கள் பிறவி எடுத்து இருக்கிறார்கள் என்று சிரித்தான்.அப்போது ஒரு தொடர் வண்டி சத்தம் கேட்டது.இவன் கொஞ்சம் பயந்தான்.ஏனென்றால்,அந்த வண்டி இந்த மலர்களை எதாவது செய்து விடுமோ என்று.கொஞ்ச நேரம் அச்சத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.சிறிது நேரம் கழிந்தது.ரயில் கடந்தது.அந்த மலர்களுக்கு எதுவும் ஆகவில்லை. டேய் தம்பி நீ போட்டு வா. எங்களுக்கு எதுவும் ஆகாது என்று கூறியது போல் இருந்தது.இவனும் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/